அனைவரும் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாள்தோறும் நேரம் ஒதுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
அனைவரும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நாள்தோறும் நேரம் ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியிருப்பது தொடர்பாக...
புதுதில்லி: அனைவருக்கும் உடற்தகுதி மிகவும் அவசியமானது என்றும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நாள்தோறும் நேரம் ஒதுக்க வேண்டும் என மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிட் இந்தியா இயக்கத்தின் மிதிவண்டி பேரணியில் 9,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ சத்ய சாயின் 100-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இந்த நிகழ்வு ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
தேசிய தலைநகர் தில்லியில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் 2047-இல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் விதமாக, தொடா்பாக அவா் பேசுகையில், எந்தவொரு நாடும் வளர்ந்த நாடாகக் கருதப்பட வேண்டுமானால், அந்நாட்டு மக்களின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது.
எனவே, இந்தியர்கள் அனைவரும் தங்களது கைபேசித் திரைகளில் நேரத்தை செலவிடுவதைக் குறைத்து, குறைந்தபட்சம் நாள்தோறும் ஒரு மணி நேரத்தையாவது ஒதுக்கி, அவற்றா தங்களது தனிப்பட்ட ஆரோக்கியத்திற்காக விளையாட்டு, யோகா போன்ற நடவடிக்கைகளுக்கு செலவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்தியாவில் நான்கு பேரில் ஒருவர் அதிக உடல் எடையுடன் காணப்படுகிறார். எனவே, மக்கள் அனைவருக்குமே உடற்பயிற்சி அத்தியாவசியமாகிறது என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாண்டியா, "ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் உடற்தகுதியுடனும் ஆரோக்கியத்துடனும் திகழச் செய்வதே 'ஃபிட் இந்தியா'வின் குறிக்கோள்; அதேவேளையில், 'அனைவரையும் நேசிப்போம், அனைவருக்கும் சேவை செய்வோம்' என்பது ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் குறிக்கோளாகும். இவ்விரு அமைப்புகளும் ஒன்றிணைவது ஒரு மிகச்சிறந்த கலவையாகும்" என்று குறிப்பிட்டார். பிரபல நடிகர் நசீர் அப்துல்லாவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இந்த முன்னெடுப்பைப் பாராட்டினார்.
ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் அகில இந்தியத் தலைவர் நிமிஷ் குலாப்ராய் பாண்டியா, விளையாட்டுத் துறைச் செயலாளர் திரு ஹரி ரஞ்சன் ராவ், பெருநிறுவன விவகாரங்கள் துறைச் செயலாளர் தீப்தி முகர்ஜி உள்ளிட்ட பிற முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து, அமைச்சர் மன்சுக் மாண்டவியா மிதிவண்டி ஓட்டும் பேரணியில் பங்கேற்றார். முன்னதாக போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான பொது உறுதிமொழி ஏற்கப்பட்டது.
குழந்தைகளை ஈர்க்கும் வகையில், பெரிய அளவிலான செஸ் மற்றும் லுடோ விளையாட்டுகள், அத்துடன் கேரம், டேபிள் டென்னிஸ், ஃபுட்சால் மற்றும் பேட்மிண்டன் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரத்யேக விளையாட்டுப் பகுதியும் அமைக்கப்பட்டது.
டிசம்பர் 2024-இல் தொடங்கப்பட்ட 'ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்' எனப்படும் 'உடல் திறன் இந்தியா - ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல்' நிகழ்வு, ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்துள்ளது. இதுவரை, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
One out of 4 persons in India is overweight. Fitness is essential for all citizens says Dr Mansukh Mandaviya...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.