முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இரும்புப் பெண்மணி

1975-ம் ஆண்டு ஜமைகா நாட்டில் காமென் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திரா காந்தி சென்றிருந்தார். இந்திராவை "இரும்புப் பெண்மணி' என்று ஆங்கிலேய நாடுகள் கூறி வந்தன.

Updated On : 21 ஏப்ரல், 2013 at 3:31 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:08 PM

மாநாடு முடியும் நாளன்று எலிசபெத் ராணி எல்லாத் தலைவர்களையும் சந்திக்க விரும்பினார். இவர்களெல்லாம் தங்கள் அடிமை நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்ற எண்ணம் ராணியிடம் இருந்திருக்க வேண்டும். அவர் எல்லாத் தலைவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் "மகா கனம் பொருந்திய எலிசபெத் ராணி அவர்கள் உங்களை சந்திக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்' என்ற பொருள்பட இருந்தது அந்தக் கடிதம்.

கடிதத்தின் அதிகாரத் தொனியை இந்திரா காந்தி சற்றும் விரும்பவில்லை. உடனே அவர் ஒரு கடிதம் எழுதி ராணிக்கு அனுப்பி வைத்தார்.

"இந்தியாவின் பிரதமர் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்' என்று. இக்கடிதம் தலைவர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

Advertisement

இங்கிலாந்து அரசி பழைய கடிதத்தைத் திரும்பப் பெற்று, "ராணி உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவார்' என்ற வாசகத்தை மாற்றிக் கடிதம் அனுப்பினார்.

ஒரு காலத்தில் எங்கள் நாடு உங்களுக்கு அடிமையாக இருந்தது. இப்போது அல்ல என்று சொல்லாமல் சொல்லி, ஆங்கிலேயர்களின் எண்ணத்தை அடக்கிய, இந்தக் கடிதத்தை சரித்திரப் புகழ் வாய்ந்தது என்று கூறுவர்.

"இந்திராகாந்தியின் சாதனைகள்' எனும் நூலிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.