முகப்பு
தமிழ்நாடு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் குழு ஆய்வு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு

Updated On : 12 மார்ச் 2013, 2:04 am IST
பகிர்:

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.

சிவகங்கையில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அகில இந்திய மருத்துவக் கவுன்சில் குழு ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு படிப்புக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

முதலாமாண்டு மாணவர்கள் சில மாதங்களில் இரண்டாமாண்டு படிப்புக்குச் செல்ல உள்ளனர். இந்த நிலையில், இக்கல்லூரியில் இரண்டாமாண்டு படிப்புக்கான தகுதி,   மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் உள்ளனவா? என ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்குவதற்காக அகில இந்திய மருத்துவக் கவுன்சிலைச் சேர்ந்த வீரண்ண கௌடா தலைமையிலான ஆய்வுக் குழு சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு திங்கள்கிழமை வந்தது.

Advertisement

Advertisement

இக் குழுவினர் மருத்துவமனையில் ஆய்வுக்கூடம், வகுப்பறை, அறுவை சிகிச்சைக் கூடம், உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, பரிசோதனைக் கூடம் உள்பட பல பிரிவுகளுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.  ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன், மருத்துவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.