முகப்பு
தமிழ்நாடு

பழநியில் நிதி நிறுவனம் மூடல்: மக்கள் புகார்

பழநியில், தங்க நகைக்கு ஈடாக கடன் வழங்கும் தனியார் நிறுவனம் மூடப்பட்டது.

Updated On : 12 மார்ச் 2013, 12:34 am IST
பகிர்:

பழநியில், தங்க நகைக்கு ஈடாக கடன் வழங்கும் தனியார் நிறுவனம் மூடப்பட்டது.

பழநியில், உதயா கோல்டு லோன் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சேரலாதன் மகன் உதயபாஸ்கரன் (35) என்பவர் இந்த நிறுவனத்தைத் துவக்கியதாகவும், இதில் பழனி, பாலசமுத்திரம், கோரிக்கடவு, நெய்க்காரபட்டி, ஆயக்குடி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமான தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின்பேரில், சுமார் 200 பவுன் நகைகள் நிறுவனத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.