முகப்பு
தமிழ்நாடு

வீராணத்திலிருந்து சென்னைக்கு மீண்டும் குடிநீர்

கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு மீண்டும் நீர் அனுப்பப்படுகிறது.

Updated On : 12 மார்ச் 2013, 12:33 am IST
பகிர்:

கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு மீண்டும் நீர் அனுப்பப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரியத்துக்கு பூதங்குடி நீர்வாங்கி நெடுமாடத்திலிருந்து நீரை பம்ப் செய்ய முடியாமல் போனதால் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் நீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது வீராணம் ஏரியின் நீர்மட்டம் 41.10 அடியாக உயர்ந்தது. இதையடுத்து திங்கள்கிழமை முதல் மீண்டும் சென்னைக்கு நீர் அனுப்புவது தொடங்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.