முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் 27-ல் திமுக இளைஞரணி கூட்டம்

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் ஏப்ரல் 27ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொருளாளரும், இளைஞரணிச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஏப்ரல் 2013, 3:38 am IST
பகிர்:

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் ஏப்ரல் 27ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொருளாளரும், இளைஞரணிச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி சங்கம் ஹோட்டலில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் 90ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது, இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெறும்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் மா. சுப்பிரமணியன், ஈ.ஜி. சுகவனம், எம்.பி.ஆர். ராஜேந்திரன், சுப.த. சம்பத், சுபா சந்திரசேகர், அசன் முகம்மது ஜின்னா, இ.பெ. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.