மதுரையில் 105 டிகிரி; 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தின் 8 இடங்களில் வியாழக்கிழமை 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. மாநிலத்தில் அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி வெயில் இருந்தது.
தமிழகத்தின் 8 இடங்களில் வியாழக்கிழமை 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. மாநிலத்தில் அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி வெயில் இருந்தது.
தருமபுரி, கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது.
தென் தமிழகத்தில் மழை: வெப்ப சலனம் காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
வியாழக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):-
மதுரை 105
கரூர் பரமத்தி 104
திருச்சி 103
திருப்பத்தூர், சேலம்,
வேலூர் 102
தருமபுரி 101
பாளையங்கோட்டை 100
கோவை 99
கடலூர், தூத்துக்குடி 95
சென்னை, நாகப்பட்டினம், புதுச்சேரி 94
கன்னியாகுமரி 91
குன்னூர் 77
கொடைக்கானல் 71