முகப்பு
தமிழ்நாடு

தனியார் கல்லூரிகளில் படித்த செவிலியர்களுக்கும் அரசு வேலை

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரிகளில் படித்த செவிலியர்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 12 மே 2013, 3:30 am IST
பகிர்:

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரிகளில் படித்த செவிலியர்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல, தொண்டு. ஜாதி, மதம் என எந்த பேதமும் இல்லாமல் தாய்க்கு நிகரான பரிவு, சகிப்புத் தன்மையுடன் அவர்கள் மகத்தான சேவை செய்து வருகின்றனர். ராணுவம், காவல் துறை போன்று இவர்களும் சீருடைப் பணியாளர்கள்.

Advertisement

Advertisement

இங்கிலாந்தில் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து செவிலியர் பணியில் அர்ப்பணிப்புடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12-ஆம் தேதி ஆண்டுதோறும் உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில், செவிலியர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். அனைத்து செவிலியர்களுக்கும் மதிமுக சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனியார் கல்லூரிகளில் படித்த செவிலியர்களுக்கும் அரசு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.