முகப்பு
தமிழ்நாடு

திருப்பூரில் தேமுதிக பேரணிக்குத் தடை

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டைக் கண்டித்து, திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை தேமுதிக சார்பில் நடைபெற இருந்த பேரணிக்கு போலீஸôர் தடை விதித்துள்ளனர்.

Updated On : 12 மே 2013, 2:37 am IST
பகிர்:

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டைக் கண்டித்து, திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை தேமுதிக சார்பில் நடைபெற இருந்த பேரணிக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையால், திருப்பூர் பின்னலாடை தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் நலிந்து வருவதாகவும், இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி, தேமுதிக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

திருப்பூர்-ஊத்துக்குளி சாலை அணைக்காடு பஸ் நிறுத்தம் அருகே தனலட்சுமி மில் மைதானத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Advertisement

Advertisement

இதையொட்டி, தேமுதிக சார்பில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேரணிக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக திருப்பூர் இருப்பதால், தேமுதிக பேரணி நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.