முகப்பு
தமிழ்நாடு

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம்: ஜெயலலிதா

கடலில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பும்போது கடல் சீற்றத்தில் விசைப்படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த மீனவர்கள் 3 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை உத்தரவிட்டார்.

Updated On : 1 ஜூன் 2013, 11:37 pm IST
பகிர்:

கடலில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பும்போது கடல் சீற்றத்தில் விசைப்படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த மீனவர்கள் 3 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை உத்தரவிட்டார்.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், அளக்குடி மற்றும் பன்னீர் கோட்டம் மாதானம் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மே 30-ஆம் தேதி விசைப்படகில் கடலில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பும்போது, கடல் சீற்றத்தின் காரணமாக பழையாறு ஆற்றின் முகத்துவாரம் அருகில் விசைப்படகு கவிழ்ந்தது.

இதில் அளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் கல்யாண சுந்தரம், மாதானம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் மகாலிங்கம் மற்றும் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், தாண்டவராயன் சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் மதியழகன் ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

Advertisement

Advertisement

இந்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் துயரமடைந்தேன். அவர்களது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன்.

விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments