முகப்பு
தமிழ்நாடு

பெட்ரோல் விலையை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி

பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 2 ஜூன் 2013, 12:02 am IST
பகிர்:

பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசாவும் உயர்த்தியுள்ளன.

Advertisement

Advertisement

உள்ளூர் வரிகளையும் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 95 பைசா உயர்ந்து ரூ.66.85 ஆகவும், டீசல் விலை 61 பைசா உயர்ந்து ரூ. 53.53 ஆகவும் உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போதுதான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும். ஆனால், சர்வதேச சந்தையில் கடந்த 3 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்துவரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

இதுவரை இல்லாத புதிய வழக்கமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததைக் காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நாள்தோறும் மாறக்கூடியது.

எனவே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்துக்கான காரணியாக ரூபாய் மதிப்பைக் கருதக் கூடாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments