முகப்பு
தமிழ்நாடு

வெப்ப சலனத்தால் ஜூன் இறுதிவரை மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜூன் இறுதிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 11 ஜூன் 2013, 11:13 pm IST
பகிர்:

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜூன் இறுதிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் மாலை முதல் இரவு வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையின் அளவு (மி.மீ):

Advertisement

Advertisement

தேவலா- 80, கூடலூர் பஜார் - 50, வால்பாறை, நடுவட்டம் - 20, ஸ்ரீபெரும்புதூர், செம்பரம்பாக்கம், செங்குன்றம்- 10

வெயில் அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக 5 இடங்களில் 100 டிகிரிக்குமேல் வெயில் பதிவானது. சென்னை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவானது.

செவ்வாய்க்கிழமை பதிவான வெயிலின் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

நாகப்பட்டினம்,

தொண்டி 102

சென்னை

மீனம்பாக்கம் 101

புதுச்சேரி, காரைக்கால் 100

மதுரை 99

கடலூர் 98

திருச்சி 97

தூத்துக்குடி, வேலூர் 96

கரூர் பரமத்தி 95

சேலம் 94

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.