முகப்பு
தமிழ்நாடு

பாழடைந்துவரும் பூவலை ஏரி சீரமைக்கப்படுமா?

கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலையில் உள்ள ஏரி சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

Updated On : 22 ஜூன், 2013 at 4:32 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலையில் உள்ள ஏரி சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

பூவலை பகுதியில் சுமார் 54 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது.

ஆனால், முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் தற்போது இந்த ஏரி, சிறு குட்டை போல காட்சியளிக்கிறது.

Advertisement

இந்த பூவலை ஏரியை நம்பி சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில், ஏரி பல ஆண்டுகள் தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில் ஏரியில் நீர் தேங்கும் அளவும் குறைந்து அப்பகுதியில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஏரியில் ரூ.80 லட்சம் செலவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்

பட்டன. ஆனால், ஏரியின் மதகுகளை திறந்து மூடும் வகையில் அமைப்பு ஏற்படுத்தப்படாததால், ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் வீணாகிறது.

இதனால் பயிர்களுக்கு போதிய நீரின்றி, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மழைக்காலத்திற்கு முன்பாக பூவலை ஏரியை தூர்வாரி, முறையான மதகுகளை அமைத்து விவசாயம் செழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.