முகப்பு
தமிழ்நாடு

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள்

தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கான கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

Updated On : 22 ஜூன் 2013, 1:25 am IST
பகிர்:

தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கான கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

இதேபோன்று, பகுதி அலுவலகங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்தி அவற்றையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் ரூ.1.44 கோடியில் கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டடத்தையும், திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் ரூ.1.48 கோடியில் கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டடத்தையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

Advertisement

Advertisement

மேலும், திருச்சி மற்றும் நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைப் பகுதிகளுக்குள் கூடுதலாக முறையே திருச்சிராப்பள்ளி (கிழக்கு) மற்றும் நாமக்கல் (தெற்கு) ஆகிய இரண்டு புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பூந்தமல்லி, சங்கரன்கோவில், உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த மூன்று பகுதி அலுவலகங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாகத் தரம் உயர்த்துதல் என மொத்தம் ரூ.2.50 கோடியில் ஐந்து புதிய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்,

திருப்பத்தூர், சூலூர், முசிறி, சீர்காழி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ஐந்து இடங்களில் மொத்தம் ரூ.1.40 கோடியில் பகுதி அலுவலகங்கள், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் ரூ.34.90 லட்சத்திலும், கரூர் மாவட்டம், குளித்தலையில் ரூ.20.58 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வு தளங்கள் என மொத்தம் ரூ.2.92 கோடி மதிப்பில் போக்குவரத்துத் துறை அலுவலகங்களையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

54 புதிய ஜீப்புகள்: போக்குவரத்துத் துறையின் களப் பணிகள் மற்றும் செயலாக்கப் பணியை மேற்கொள்ளவும், அதிக எண்ணிக்கையிலான வாகனத் தணிக்கை மேற்கொள்ளவும், விபத்து வாகனங்களை விரைந்து கள ஆய்வு செய்ய ஏதுவாகவும் 49 பகுதி அலுவலகங்கள் மற்றும் 5 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு ரூ.2.97 கோடியில் வாங்கப்பட்ட 54 புதிய ஜீப்புகளை போக்குவரத்து துறையின் அலுவலகப் பயன்பாட்டிற்காக கடந்த வியாழக்கிழமை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.