முகப்பு
தமிழ்நாடு

என்.எல்.சி. பங்கு விற்பனையை கைவிட வேண்டும்

என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 12 ஜூலை 2013, 3:32 am IST
பகிர்:

என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: என்.எல்.சி.யின் பங்குகளை விற்கக்கூடாது என ஜூலை 3-ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டுக்கு சுமார் ரூ.1,400 கோடி லாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனத் தொழிலாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை, அலட்சியப்படுத்தி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அதிகார ஆணவப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடருவதால், உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்பதைக் காட்டுவதற்கு அங்கு பணியாற்றும் பொறியாளர்கள், அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி உற்பத்தியில் ஈடுபட வைக்க வேண்டும் என்று மத்திய அரசு, என்.எல்.சி. நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

இதன் மூலம் தொழிலாளர்களின் போராட்டத்தைச் செயல் இழக்கச் செய்யலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.

என்.எல்.சி. தொழிலாளர்களின் உறுதிமிக்க உரிமைப் போராட்டம் தொடரும் நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டுவர, என்.எல்.சி.பங்குகள் விற்பனை முயற்சியை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார் வைகோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.