முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 16,912 கன அடியாக ஞாயிற்றுக்கிழமை குறைந்தது. அணைக்கு சனிக்கிழமை நொடிக்கு 25,890 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Updated On : 11 ஆகஸ்ட் 2013, 11:25 pm IST
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 16,912 கன அடியாக ஞாயிற்றுக்கிழமை குறைந்தது. அணைக்கு சனிக்கிழமை நொடிக்கு 25,890 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பின. அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி அங்கிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதனால், கடந்த 4-ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. அணையின் நீர்மட்டம் 121 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் உபரி நீர்ப் போக்கி வழியாக உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

Advertisement

Advertisement

கடந்த இரு நாள்களாக கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வந்தது.

இதையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் முழுவதுமாக ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை அணைக்கு நொடிக்கு 16,912 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்துக்கு நொடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்தைவிட திறப்பு அதிகமாக இருந்ததால், ஒரு வாரத்திற்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.99 அடியாகக் குறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.