தமிழ்நாடு

முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: அப்போலோ மருத்துவமனை அறிக்கை

DIN

சென்னை: முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என்று அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இருதய, சுவாச, நீரிழிவு மற்றும் கிருமி தொற்று நோய் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிசியோதெரபி சிகிச்சையும் முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஜெயலலிதாவால் நன்கு பேச முடிகிறது

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT