தமிழ்நாடு

454 கோயில்களில் சுதந்திர தின விழா வழிபாடு, பொது விருந்து

DIN

சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் 454 கோயில்களில் சிறப்பு வழிபாடும், பொது விருந்து நிகழ்ச்சியும் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின்படி, நிதி வசதிமிக்க திருக்கோயில்களில் சுதந்திர தினத்தன்று சிறப்பு வழிபாடும், பொது விருந்து நிகழ்ச்சியும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல, இந்த ஆண்டு ஆகஸ்ட் 15} ஆம் தேதி 454 கோயில்களில் சிறப்பு வழிபாடும், பொது விருந்தும் நடத்தப்படும்.
இதில் மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது.சென்னையில் உள்ள கோயில்களில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் சட்டப்பேரவைத் தலைவர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT