தமிழ்நாடு

பேசுவதை நிறுத்திக்கொண்டு போராட்ட களத்திற்கு வாருங்கள்: கமல்ஹாசனுக்கு சீமான் சவால்

DIN


சென்னை: பேசிக்கொண்டும், அறிக்கை விடுத்துக்கொண்டும் இருக்காமல் போராட்ட களத்திற்கு வாருங்கள் என்று நடிகர் கமல்ஹாசனுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வரும் கமல்ஹாசன், நேற்று ஊழலுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் அவராகவே ராஜிநாமா செய்ய வேண்டாமா? அவரது ராஜிநாமாவை எந்த கட்சியுமே ஏன் கோரவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், கமல்ஹாசனின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாதி வேண்டாம் என்று சொல்கிற ஒருவர் இருந்தால் சொல்லுங்கள், நான் தலைமை ஏற்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அதே இடத்தில் வைக்க கமல்ஹாசன் குரல் கொடுப்பேன் என்று சொல்லட்டும். அவருடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன்.

ஊழலை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம் செய்வோம் என கமல்ஹாசன் தெரிவிக்கட்டும். நாங்கள் அதில் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் ஊழல் செய்தவர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும். அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுதான். ராஜிநாமா செய்ய இங்கு யாரும் காமராஜர் போல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக ‘நீட்’ தேர்வில் ஓராண்டு காலத்துக்கு மத்திய அரசிடம் விலக்கு கேட்பதற்கு காரணம் இருக்கிறது. அதே காரணம் அடுத்த ஆண்டும் இருக்கும். அதனால் தான் அதற்கு நிரந்தர விலக்கு கேட்கிறோம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT