தமிழ்நாடு

நீட் தேர்வில் ஓராண்டுக்காவது விலக்கு அளிக்க பரிசீலிக்க வேண்டும்: இல. கணேசன்

தினமணி

நீட் தேர்வில் ஓராண்டுக்காவது விலக்கு அளிக்க பரிசீலிக்க வேண்டும் என்று பாஜக எம்பி இல. கணேசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
நீட் தேர்வில் ஓராண்டுக்காவது விலக்கு அளிக்க பரிசீலிக்க வேண்டும். மாட்டுக்கு கொண்டுவந்த அவசரச்சட்டம் வேறு, நீட்டுக்கு கொண்டு வந்த அவசரச்சட்டம் வேறு.

முத்தலாக் தடை தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே நேரத்தில் 3 முறை தலாக் சொல்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. முத்தலாக் தொடர்பான தீர்ப்பால் மகிழ்ச்சி அடைவது இஸ்லாமிய பெண்கள்தான். 

பழனிசாமி, ஓபிஎஸ் ஒற்றுமையால் பாஜகவுக்கு எந்த பலனும் இல்லை. அதிமுக ஆட்சி அடுத்த 4 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT