தமிழ்நாடு

கிளாம்பாக்கத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

DIN

வண்டலூர் அருகே புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெறும் காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
எம்ஜிஆர் நினைவைப் போற்றியும், அவர் ஆற்றிய பணிகள், அவரது வாழ்க்கை வரலாறை இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையிலும் மாவட்டந்தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாநில அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. 
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முதல் மாநாடு கடந்த 30.6.2017 அன்று மதுரையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர் மாவட்டம் அரியலூர் ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது. 
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புதன்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு எம்ஜிஆரின் உருவப் படத்தைத் திறந்து வைத்தும், ரூ.75.81 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ள 58 திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.27.34 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்புரையாற்றுகிறார். 
இவ்விழாவில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்கள், கே.என்.ராமச்சந்திரன்,மரகதம் குமரவேல் உள்ளிட்ட எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், வாரியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
விழாவை முன்னிட்டு புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் எம்ஜிஆர் புகழ்பாடும் இன்னிசை கச்சேரி மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. 
முன்னதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா நன்றி தெரிவிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT