தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

DIN

ஒக்கி புயலால் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல் தென்காசி, குற்றாலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடனும், இருள்சூழ்ந்தும் காணப்படுகிறது. மேலும், தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வெள்ளத்தின் சீற்றம் தணியவில்லை.பேரருவியில் பெண்கள் குளிக்கச் செல்லும் நடைபாதையிலும் தண்ணீர் வழிந்தோடியது. ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியிலும் தொடர்ந்து குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேரருவி உள்ளிட்ட அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை தென்காசி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர். குற்றாலம் வந்த ஐயப்ப பக்தர்கள் சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளில் நீராடிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT