தமிழ்நாடு

ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட முயன்றதாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கைது

DIN

ஓஎன்ஜிசிக்கு எதிராக நன்னிலத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். 

திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்காக பதிக்கப்பட்ட குழாய்களில் சில நேரங்களில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதனால், டெல்டா மாவட்டங்களிலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் அருகேயுள்ள கடம்பங்குடியில் கடந்த 25 ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அப்பகுதியில் 5 எண்ணெய் கிணறுகள் உள்ள நிலையில் 6-வதாக புதிய எண்ணெய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் போராட்டம் நடத்துவதற்காக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவரும், பேராசிரியருமான ஜெயராமன் அங்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டம் நடத்தவிடாமல் ஜெயராமன் உள்ளிட்ட 4 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே ஜெயராமனை விடுதலை செய்யக்கோரியும், நன்னிலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற கோரியும் அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெயராமன் ஏற்கனவே, ஓஎன்ஜசிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT