தமிழ்நாடு

மாநில மனநல காப்பீட்டுக் கொள்கை வரைவு வெளியீடு

DIN

மாநில மனநல காப்பீட்டுக் கொள்கை வரைவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மாநில மனநல காப்பீட்டுக் கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் தேசிய சுகாதாரத் திட்ட வரைவு ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.
தற்போதைய சமூகம் எதிர்கொள்ளும் மனநல சம்பந்தமான முக்கியப் பிரச்னைகள், குழந்தை பருவ மனநலப் பாதிப்புகள், தற்கொலைகள், மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற மக்கள், முதியோர்களின் மனநல பாதிப்புகள் ஆகியவை குறித்து இந்தக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. 
அரசு மருத்துவமனைகள் மற்றும் சமூகத்தில் உயர்தர மனநல சுகாதார சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது, முன்கூட்டிய சோதனை முறை, பரிந்துரைகள், சுகாதார சேவைகள் குறித்தும் இந்த வரைவில் விவரிக்கப்பட்டுள்ளது. 
ஜ்ஜ்ஜ்.ய்ழ்ட்ம்ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஆர்வமுள்ள பொதுமக்கள், நிபுணர்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கருத்துக்களை 21 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT