தமிழ்நாடு

திருவண்ணாமலை ரமணாஸ்ரம சுற்றுச்சுவர் இடிந்து விபத்து: 2 பேர் சாவு

சரவண பெருமாள்

திருவண்ணாமலையின் கிரிவலப்பாதையில் ரமணாஸ்ரமம் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

திருவண்ணாமலையின் கிரிவலப்பாதை விரிவாக்கத் திட்டப்பணி ரூ.65 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. 

இங்குள்ள ரமணாஸ்ரமத்தின் அருகில் இந்தப் பணிகள் காரணமாக மழை நீர் கால்வாய் அமைக்கு பணி நடைபெற்று வந்தது. அப்போது அதன் வெளிப்புற சுற்றுச்சுவர் எதிர்பாரா விதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமைடந்த இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT