தமிழ்நாடு

எண்ணெய் படலங்கள் அகற்றும் பணி இன்றுடன் நிறைவு: மாவட்ட ஆட்சியர்

DIN

எண்ணெய் படலங்களை அகற்றும் பணி இன்று மாலை நிறைவடையும் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே இரண்டு சரக்குப் கப்பல்கள் சனிக்கிழமை மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கப்பலிலிருந்து கசிந்த எண்ணெய் படலமாக எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் அருகே கரை ஒதுங்கியது. இதனால் மீன்கள், ஆமைகள் உள்ளிட் கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றனர். மேலும் மீனவர்களும் கடலுக்கு செல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எண்ணுர் கடல்பகுயில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி இன்றுடன் நிறைவடையும். கழிவுகளை இயந்திரங்கள் மூலம் அகற்ற முடியாததால் மனிதர்களை பயன்படுத்தி வருகிறோம். மீன்களை மனிதர்கள் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்பது அரசு ஆய்வில் நிரூபணமாகியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT