தமிழ்நாடு

தலித் சிறுமி கொலை வழக்கு: இந்து முன்னணி நிர்வாகி குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

DIN

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே தலித் சிறுமி நந்தினி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி, குண்டர் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17). இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம், சில நாட்களுக்கு பின்னர் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இந்து முன்னணி ஒன்றியச் செயலர் மணிகண்டன், அவரது நண்பர் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மணிகண்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூர் மாவட்ட போலீஸார் வழக்கினர். இதையடுத்து, மணிகண்டன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT