தமிழ்நாடு

விவேகானந்தரைப் பின்பற்றினால் தெளிவு பிறக்கும்: சுவாமி அபவர்கானந்தர்

DIN

விவேகானந்தரின் வழிகளைப் பின்பற்றுவோருக்கு தெளிவு பிறக்கும் என்று ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர் கூறினார்.
விவேகானந்தரின் தமிழகச் சீடர்கள் என்ற தலைப்பில் அவர் பேசியது:
லட்சக்கணக்கான ஆசிரியர்கள், குருமார்கள் இருக்கலாம். ஆனால் ஒரு சீடரைக் கண்டறிவது கடினம். எனவே சீடராக இருப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
சீடராக இருக்க வேண்டியவர்களுக்கு சில முக்கியத் தகுதிகள் வேண்டும். அதற்கு நிறைய ஆயத்தங்கள் வேண்டும். சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்கிறார் விவேகானந்தர்.
சத்தியத்தை அறிய விரும்பும் சீடர் இந்த உலகிலும் மறுஉலகிலும் ஆசைகளை விட்டுவிடவேண்டும். ஏனெனில் நாம் எதைப் பார்க்கிறோமே அது உண்மையல்ல. ஒருபோதும் மறையாதவர் எப்போதும் இருப்பவர் கடவுள் மட்டுமே. எனவே, அவரை மட்டுமே நாடி, மற்ற ஆசைகளை விட்டுவிட வேண்டும். அக மற்றும் புற புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆன்மிகக் குணங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆன்மிகப் பாதையில் செல்லும்போது துன்பங்கள் வரலாம். அதற்காக அந்தப் பாதையை விட்டுவிடக்கூடாது. துன்பங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் செய்த கர்மவினையின் காரணமாகவே துன்பங்கள் வருகின்றன.
தமிழகத்தில் விவேகானந்தரின் சீடர்கள் எத்தனை பேர் என்ற சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் விவேகானந்தரின் சீடர்களை 4 விதமாகப் பிரிக்கலாம்.
விவேகானந்தரின் தவசக்தி, தேசபக்தியை அறிந்து அதன் மூலம் உந்துதல் ஏற்பட்டு சீடர்களானவர்கள். விவேகானந்தரின் வாழ்க்கையைப் பின்பற்றி, துறவறம் பூண்டவர்கள், விவேகானந்தர் சென்னைக்கு வந்தபோது அவரின் கருத்துகளைக் கேட்டு அவரைப் பின்பற்றத் தொடங்கியவர்கள், விவேகானந்தரின் காலத்துக்குப் பின்பு அவரின் கருத்துகள், பெருமைகளை அறிந்து அவருக்கு சீடரான மகாகாவி பாரதியார் போன்றோர்.
விவேகானந்தரின் கொள்கைகளை பின்பற்றிய பாரதியார், சகோதரி நிவேதிதையை கொல்கத்தாவில் சந்தித்தார். அப்போது பாரதியாரிடம், பாரதமாதா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடக்கிறாள். அடிமைத்தனத்தில் இருந்து அவளைக் காப்பாற்ற தேசபக்தி பாடல்களை எழுதுமாறு கூறினார் நிவேதிதை. அதன் பின்பே தேசபக்திப் பாடல்களை பாரதியார் எழுதத் தொடங்கினார். விவேகானந்தர் தன் சீடர்களிடம் மறைவுக்குப் பின்பும் என் அன்பு உங்களிடம் இருக்கும்படி செயலாற்றுங்கள் என்றார். விவேகானந்தரின் பாதையைப் பின்பற்றுவோருக்கு நிச்சயம் அருள் வந்து சேரும், தெளிவு பிறக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT