தமிழ்நாடு

அரசியல் குழப்பங்களுக்கு உடனடி தீர்வு தேவை: ராமதாஸ்

DIN

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் "நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டால்தான் இம்மசோதா சட்டமாகும். அப்போதுதான் நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு பெற முடியும்.
இவை மட்டுமின்றி, உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டிய பல முக்கியக் கோப்புகள் முதல்வர் அலுவலகத்திலும், அமைச்சர்கள் அலுவலகங்களிலும் முடங்கிக் கிடக்கின்றன.
12 ஆண்டுகளாக குடும்ப அட்டைகள் வழங்கப்படாத நிலையில், ஏப்ரல் மாதத்தில் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்படாத நிலையில், ஏப்ரல் மாதத்தில் அவற்றை வழங்க முடியாது. இதனால் பொதுவிநியோகத் திட்டத்தில் குழப்பம் ஏற்படும்.
இதற்கெல்லாம் மேலாக 2017-18 -ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 31 -ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.
இத்தகைய நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால், தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட
வேண்டும்.
உடனடி தீர்வு சாத்தியமில்லை என்று ஆளுநர் கருதுவாரேயானால், தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் அதிகாரப் போட்டி மற்றும் அரசியல் குழப்பத்தால் தமிழக மக்களும், மாணவர்களும் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT