தமிழ்நாடு

எம்எல்ஏக்கள் யாரையும் அடைத்து வைக்கவில்லை: சசிகலா

DIN

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை 2வது நாளாக சந்தித்து ஆலோசனை நத்தினார்.

பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா கூறியதாவது:

எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாக உள்ளனர். குடும்ப உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். யாரையும் அடைத்து வைக்கவில்லை. அவர்கள் மனதில் உள்ளதை சொல்லிக்கொண்டு சுதந்திரமாக உள்ளனர்.

அதிமுக அரசுக்கு பங்கம் வந்து விடக்கூடாது என்ற முனைப்பாக ஒற்றுமையுடன் உள்ளார்கள் .குடும்ப உறுப்பினர்களுடன் குழந்தைகளுடன் தொலைபேசியில் பேசி வருகின்றனர். ஆதரவு எம்எல்ஏக்களின் செய்தியார்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

ஆட்சி அமையாது என்ற செய்தி தவறானது என ஆளுநர் மாளிகையே செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற செய்திகளை எதிரி கட்சியினரும் கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களும் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

எனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கட்டுகோப்பாக உள்ளனர். ஆதரவு எம்.எல்.ஏக்கள் குடும்பத்தினரையும் அவர்களது குழந்தைகளை தூக்கிக்கொண்டு சென்று விடுவோம் என்று மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT