தமிழ்நாடு

எதையும் நல்லதாகவே ஏற்பேன்: சசிகலா

DIN

எதையும் நல்லதாகவே ஏற்றுக் கொள்வேன் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
கூவத்தூரில் அவர் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைத்தும் நல்லவிதமாக போய்க் கொண்டு இருக்கிறது. எம்எல்ஏக்களை சந்தித்துபேசினேன். நல்லபடியாக, சந்தோஷமாக இருக்கிறார்கள்.
கேள்வி: இன்றைக்கு (திங்கள்கிழமை) ஏன் இங்கேயே தங்குகிறீர்கள்?
பதில்: எல்லோரும் கேட்டார்கள். சரி என்றேன்.
கேள்வி: எம்எல்ஏக்களின் மனஉணர்வு எப்படி இருக்கிறது?
பதில்: நன்றாக இருக்கிறது.
கேள்வி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: எதையும் நல்லதாக ஏற்றுக் கொள்வேன்.
கேள்வி: ஓ.பி.எஸ். வழக்கமான பணிகளைத் தொடங்கியுள்ளாரே?
பதில்: எப்படி பணிகளைத் தொடர முடியும். ஆளுநர் என்ன சொல்லியிருக்கிறார். அவர் வேறு ஒன்றும் தனியாகச் செயல்பட முடியாது. அடுத்த ஆட்சி அமையும் வரை பொறுப்பு முதல்வராகவே இருக்க முடியும். என்ன செய்யலாம் என்றால், சட்டம்-ஒழுங்கை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என அதிகாரிகளுக்கு ஆலோசனை சொல்ல முடியும். அதற்கு மேல் வேறு ஒன்றும் செய்ய முடியாது.
அதிமுக ஆட்சி அமையும். எப்படியும் இந்த அரசாங்கத்தை நடத்துவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT