முகப்பு
தமிழ்நாடு

தினகரனுக்கு பதவி: எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா!

சசிகலாவின் உறவினர் டி.டி.வி தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Updated On : 15 பிப்ரவரி 2017, 1:12 pm IST
பகிர்:

திருநெல்வேலி: சசிகலாவின் உறவினர் டி.டி.வி தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தனது உறவினர்  டி.டி.வி தினகரனை துணை பொதுச்செயலாளர் பதவியில் நியமித்து பொதுச்செயலாளர் சசிகலா இன்று காலை உத்தரவிட்டார்.

இது தொடர்பாக இன்று நெல்லையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

Advertisement

Advertisement

அதிமுக துணை பொதுச்செயலாளராக சசிகலாவின் உறவினர் டி.டி.வி தினகரன் நியமிக்கப்பட்டிருப்பது வருத்தம் தருகிறது. இதனால் எனது அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். 

தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் வார்தா புயல், ஜல்லிக்கட்டு போன்ற விவகாரங்களில் சிறப்பாக செயல்பட்டார்.

மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பளிக்கும் கட்சியில் இணைந்து செயல்பட எண்ணுகிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து. ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்.

இவ்வாறு கருப்பசாமி பாண்டியன் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments