தமிழ்நாடு

எரிபொருள் சிக்கனம் தேவை: அரசு அதிகாரி வலியுறுத்தல்

DIN

எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவதில் பொது மக்கள் கவனம் செலுத்துவது அவசியம் என்று தமிழக அரசு தரவு மைய முதன்மை செயலர் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்திள்ளார்
எண்ணெய் மற்றும் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார நிறைவு விழா புதன்கிழமை (பிப்.15) நடைபெற்றது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு தரவு மையத்தின் முதன்மைச் செயலர் எஸ்.கோபாலகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசியது:
எரிசக்தி நுகர்வு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். எரிபொருள் சிக்கனத்தை இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்துவதற்கு காரணம் உள்ளது.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் எரிசக்தி பாதுகாப்புக்கு எதிராக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து வருகின்றனர். எரிபொருளைத் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள், ஆட்சிக்குள் குறுக்கிட்டு வர்த்தக பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வளர்ச்சி என்று கருதுவது தவறு: புதிய தொழில் நுட்பம் வரலாம். ஆனாலும் எரிசக்தி சேமிப்பில் ஆர்வம் செலுத்த வேண்டும். இதற்கு தண்ணீர் பற்றாக்குறையை உதாரணமாகச் சொல்லாம்; எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. ஒருவர் பயன்படுத்தும் மின்சாரம், பெட்ரோல் ஆகியவை நுகர்வு அதிகரித்தால், அதை வளர்ச்சி என்று கருதுகின்றனர். கச்சா எண்ணெய் அதிகப்படியாக இறக்குமதி செய்யப்படுகிறது. அதன் விலை குறைந்துள்ளது. இப்படியே இருக்குமா என்று கூற முடியாது. எனவே கச்சா எண்ணெய் நுகர்வை குறைக்க வேண்டும். எனவே எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம்.
எரிபொருளைப் போன்றே மின்சாரத்தையும் அனைவரும் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம். இதை மாணவர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் மாணவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.
இந்தியன் ஆயில் நிறுவன பொது மேலாளர் டி.ஜி.நாகராஜன், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் (தமிழகம், புதுவை) தலைவர் டி.வி.பாண்டியன், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் புலெய், "கெயில்' நிறுவனத்தின் மண்டல மேலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு பரிசுகள்: இந்த நிகழ்ச்சியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற எரிபொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

ஹெச்.டி.குமாரசாமி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

சிறையில் இருந்தவாறு வென்ற சுயேச்சை வேட்பாளர்!

லடாக்கில் சுயேச்சை வேட்பாளர் முன்னிலை

வயநாடு, ரே பரேலியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் முன்னிலை!

SCROLL FOR NEXT