தமிழ்நாடு

சிறையில் வீட்டு சாப்பாடு, மினரல் வாட்டர் வழங்க சசிகலா கோரிக்கை

DIN


பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தனக்கு சிறையில் வீட்டு சாப்பாடும், மினரல் வாட்டரும் வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

பெங்களூருவில் பரப்பன அக்ரஹார வளாகத்தில் அமைந்துள்ள சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தனித்தனி அறையில் அடைக்கப்பட உள்ளனர்.

இன்னும் சற்று நேரத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா சரணடைவார். இந்த நிலையில், அவர் தரப்பில் சிறையில் தனக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து கோரிக்கைக் கடிதம் வைக்கப்பட்டது.

அதில், தனக்கு நீரிழிவு நோய் இருப்பதால் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை கேட்டுள்ளார். மேலும், குடிக்க மினரல் வாட்டர், வெஸ்டர்ன் டைப் கழிவறை, 24 மணி நேரமும் சுடுநீர் போன்றவை தனது அறையில் கிடைக்க வசதி செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.

சசிகலா அடைக்கப்பட உள்ள அறையில் கட்டிலும் டிவியும் இருக்கும். அவருக்கு உணவு தயாரிக்க உதவியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மு.கருணாநிதி பிறந்தநாள்: திமுகவினா் மரியாதை

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அரிசி உற்பத்தியில் தமிழகத்துக்கு பின்னடைவு: முதல்வா் விளக்கமளிக்க பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT