தமிழ்நாடு

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து ஓ.பி.எஸ். கருத்துச் சொல்லாதது ஏன்?

DIN

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்காதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளதாக பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் விளைவாக தமிழக அரசியலில் அடுத்தடுத்து பல மாற்றங்கள் நிகழவுள்ளன.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இதுவரை கருத்து தெரிவிக்காதது பல ஐயங்களை எழுப்பியுள்ளது.
பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைத் தொடர, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்' என்று கோரியிருக்கிறார்.
ஜெயலலிதா ஆட்சி ஊழலாட்சி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், அவரது அணுகுமுறையை பின்பற்ற வேண்டும், அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர வேண்டும் என்று கூறுவதன் மூலம் ஊழலாட்சி தான் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறாரா? என்பதை பன்னீர்செல்வம் விளக்க வேண்டும்.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இனி குற்றவாளியாகத் தான் பார்க்கப்பட வேண்டுமே தவிர, முன்னாள் முதல்வருக்குரிய மாண்புகளை அவருக்கு அளிக்க முடியாது.
அவருடைய பிறந்தநாளையும், நினைவு நாளையும் அரசு நிகழ்வுகளாக நடத்துவதோ, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அரசு செலவில் நினைவிடம் அமைப்பதோ சாத்தியம் இல்லை.
சட்டப்பேரவை மாடத்தில் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறக்க இயலாது.
அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படங்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று ராமதாஸ் வவியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT