தமிழ்நாடு

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பன்னீர்செல்வம்  அணியினர் ஆலோசனை!

DIN

சென்னை: தமிழகத்தில் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பன்னீர்செல்வம் அணியினர் வழக்கறிஞருடன் ஆலோசித்து வருகின்றனர். 

தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் நிலையற்ற தனமைக்கு முடிவுக்கட்டும் விதமாக அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று காலை அழைப்பு விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம அணியைச் சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகிய இருவரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜோதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதே நேரத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தலைமையில் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பிக்கள் இன்று மதியம் 2.45 மணி அளவில் தில்லியில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT