தமிழ்நாடு

தலைமைச் செயலகம் முழுவதும் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு

DIN

அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பேரவை அமைந்துள்ள தலைமைச் செயலகம் முழுவதும் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலகத்துக்குள் அரசு அதிகாரிகள், பணியாளர்களின் வாகனங்களைத் தவிர்த்து மற்றவர்களின் இரு, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், பேரவை வளாகத்துக்குள் செல்லிடப்பேசி போன்ற நவீன கருவிகளை எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரீனா கடற்கரை காமராஜர் சாலைத் தொடங்கி பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை உள்ள பகுதிகளை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். காமராஜர் சாலை,ராஜாஜி சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் போலீஸாரின் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT