தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

DIN

சென்னை: சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது.

ஆளுநர் அழைப்பு விடுத்ததின் பேரில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் 13- ஆவது முதல்வராக நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் 15 நாட்களுக்குள் தனது தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்றும் தெரிவிக்கபட்டிருந்தது.

ஆனால் சனிக்கிழமை அன்று சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படும் என்று நேற்று மாலை அறிவிப்பு வெளியானது.

நேற்று பதவியேற்பு விழா முடிந்ததும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூர் திரும்பி சென்றனர். அதனை ஒட்டி சென்னையை அடுத்துள்ள கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்துக்கு   தலைமை தங்குகிறார்.

நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இதே போன்ற கூட்டங்களை எதிர்க்கட்சியான திமுக மற்றும் கா ங்கிரசும் நடத்துகிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT