தமிழ்நாடு

கையை உயர்த்தி பெரும்பான்மையை உறுதி செய்வது ஜனநாயகம் ஆகாது: தி.வேல்முருகன்

DIN

தமிழக சட்டப்பேரவையில் கையை உயர்த்தி பெரும்பான்மையை உறுதி செய்வது ஜனநாயகம் ஆகாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் தி.வேல்முருகன் கூறினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் ,சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிறுவனர் தலைவர் தி.வேல்முருகன், செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையைக் கையை உயர்த்தி உறுதி செய்வதற்கான செயல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் பெரும்பான்மையை உறுதி செய்வது ஜனநாயகம் ஆகாது.
அதேபோல குரலை எழுப்பி உறுதிசெய்வதும் கூடாது. காலம், காலமாகக் கடைப்பிடித்து வரும் இந்த முறைகளை காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும். இந்த முறைகளை மாற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது மாற்றாமல் தற்போது மாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது அரசியல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மத்தியில் உள்ள பாஜக அரசு, தமிழகத்தில் கால் ஊன்றுவதற்காகத் திட்டம் தீட்டி தமிழகத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது.
அதன் காரணமாக, திராவிடக் கட்சிகள் ஒழிந்ததாக தமிழக பாஜகவினர் கூறி வருகின்றனர். இதற்கு தமிழக மக்களும், அதிமுகவினரும் பலியாகாமல் இருக்க வேண்டும். அதிமுகவினர் தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசுக்கு ஒத்துப் போனால் மக்கள் விரோத அரசாகப் பார்க்க நேரிடும். தமிழனாக இருந்தாலும், தமிழர்களுக்கான அரசை யாரும் இங்கு நடத்தவில்லை. அனைவரும் ஊழலுக்கு உள்பட்டவர்களாக இருப்பதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளனர்.
தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதைத் தேர்தல் ஆணையம் தட்டிக் கேட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசு, மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் நடவடிக்கையை தடுக்க வேண்டும். அதேபோல் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டும் தடுப்பணைத் திட்டத்தையும் தடுக்க வேண்டும்.
மீத்தேன் திட்டத்தின் மறுவடிவமான ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமங்களில் விவசாயத்தை அழித்து அத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT