தமிழ்நாடு

பல்வேறு இடங்களில் திருடியதாக 2 பேர் கைது

DIN

ஈரோட்டில், பல்வேறு இடங்களில் திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 103 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
ஈரோடு மாநகரில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த தனிப்படையினர், கருங்கல்பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். அதையடுத்து, அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனர்.
விசாரணையில், அந்த நபர்கள் தஞ்சை மாவட்டம், திருவையாறு தாலுகா திருக்காட்டுப்பள்ளி, விஸ்ணம் பேட்டையைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முத்து என்கிற முத்துராஜ் (29), வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், பெரியகுளிச்சியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் மனோஜ் (26) என்பதும், இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களில் ஈரோடு கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதிகளில் பல திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
இது தவிர, ஏற்கெனவே 25 வழக்குகளில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. ஈரோடு மாநகர உள்கோட்டத்தில் ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், பச்சப்பாளி, சூரம்பட்டிவலசு, மூலப்பாளையம் உள்ளிட்ட 13 இடங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, இவர்கள் இப்பகுதிகளில் திருடிச் சென்று பதுக்கி வைத்திருந்த 103 பவுன் தங்க நகைகளையும் போலீஸார் கைப்பற்றினர். இது தவிர, 40.25 பவுன் நகைகளை நீதிமன்றம் மூலமாக இவர்களிடமிருந்து மீட்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
பிடிபட்ட நபர்களிடம் இருந்து திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புத் தடிகள், கத்தி, கையுறைகள், முகமூடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டுக்கோட்டையில் மே தினப் பேரணி

தூய்மைப் பணியாளா்கள் மே தின உறுதியேற்பு

அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவி

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பாஜக வேட்பாளரை புகழ்ந்து பேசிய திரிணமூல் பொதுச் செயலா் பதவி பறிப்பு

SCROLL FOR NEXT