தமிழ்நாடு

தரமற்ற உணவு: விடுதி மாணவர்கள் மறியல்

DIN

தரமற்ற உணவு வழங்குவதாக, அரசுக் கல்லூரி விடுதி மாணவர்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் அருகே, லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்லூரி அருகில் விடுதி உள்ளது. விடுதியில், 170 மாணவர்கள் தங்கி உள்ளனர். மாணவர்களுக்கு தரமான உணவு தருவதில்லை என்றும், அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை விடுதி மாணவர்கள் 150 பேர் கல்லுôரி முன்பு சாலையில் உணவை கொட்டி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளி கிருஷ்ணன் மற்றும் மோகனுôர் போலீஸா,ர் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுக்குமாறும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து, மறியலை மாணவர்கள் கைவிட்டு, கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால், மோகனுôர்-நாமக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT