தமிழ்நாடு

குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுப்பார்: ஸ்டாலின் நம்பிக்கை!

DIN

சென்னை: தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தமிழக சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற விவகாரங்களை புகாராக அளித்துவிட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்த ஸ்டாலின் இரவு சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம், கடந்த 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்கள் குறித்து நாங்கள் கொடுத்த புகாரை முழுமையாக படித்து பார்த்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிராணப்  உறுதியளித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், துணைத்தலைவர் ராகுல்காந்தியையும் மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தோம். சோனியாவிடம் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தேன். அவர்கள் தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்கள் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT