தமிழ்நாடு

கொடுங்கையூர் தீ விபத்து: மருத்துவமனையில் 5 பேர் கவலைக்கிடம்

DIN

கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு பேக்கரியில் ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 48 பேர் தீக்காயமடைந்தனர். ஏகராஜ் என்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்தார்.
தீ விபத்தில் காயமடைந்தோர் சென்னை ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் 13 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒருவர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார். மீதம் உள்ள 10 பேர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைவரும் நிலையாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
4 பேர் கவலைக்கிடம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 33 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர். 2 பேர் புறநோயாளியாகச் சிகிச்சை பெற்றுச் சென்றனர். மீதம் 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வசந்தாமணி கூறியது:
சிகிச்சை பெற்று வரும் 20 பேரில் 6 பேருக்கு 40 சதவீதத்துக்கும் குறைவான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
மீதம் உள்ள 14 பேர்களுக்கும் 40 சதவீதத்துக்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பரந்தாமன்(67) , அபிமன்யூ (40), பார்த்திபன்(24) , பாஸ்கர்(38) , முனீஷ் என்ற 11 வயது பெண் குழந்தை ஆகியோர் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.
கொடுங்கையூர் தீ விபத்தில் சிக்கியோருக்கு தீக்காய சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் நிர்மலா பொன்னம்பலத்தின் தலைமையில் 12 மருத்துவர்கள் மற்றும் 32 செவிலியர்கள், 24 மணி நேரமும் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஓ.பன்னீர் செல்வம் நலம் விசாரிப்பு: ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை நலம் விசாரித்தார். நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT