தமிழ்நாடு

கோத்தகிரியில் சிறுத்தை நடமாட்டம்

DIN

நீலகிரி மாவட்டம், கோத்திகிரி தீயணைப்பு நிலையக் குடியிருப்பு அருகே சிறுத்தை நடமாடியது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டெருமை, கரடி, யானை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் அவ்வப்போது நடமாடி வருகின்றன.
இந்நிலையில், கோத்தகிரி, டானிங்டன் தீயணைப்பு நிலைய குடியிருப்புப் பகுதியில் கடந்த மே 29-ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாடியது, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கண்காணிப்பு கேமராவை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தபோது இந்த சிறுத்தை நடமாட்டம் தெரிய வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுத்தையைக் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் அப்பகுதியில் 2 நாய்கள் காணாமல் போன நிலையில், அவற்றை சிறுத்தை தாக்கியிருக்க வாய்ப்பிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே,குடியிருப்பு அருகே நடமாடி வரும் சிறுத்தையைப் பிடித்து அடர்ந்த வன பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT