தமிழ்நாடு

மாட்டிறைச்சி விவகாரம்: பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்; வெளிநடப்பு

DIN

சென்னை: சட்டப் பேரவையில் இன்று மாட்டிறைச்சி தடைக்கு எதிராக திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக திமுக சார்பில் சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசினார்.
தடைக்கு எதிராக மேகாலயா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன்? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் பழனிசாமி பேசுகையில், தமிழகத்தில் பசுவதைத் தடைச் சட்டம் கடந்த 40 ஆண்டுகளாக அமலில் உள்ளது.

மேலும், மக்களின் விருப்பம், கோரிக்கையை என்னவோ அதனை ஏற்று அரசு அதனை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வரின் பதில் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட மூன்று அதிமுக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT