தமிழ்நாடு

ஆபத்தான நிலையில் மின்மாற்றி: சீரமைக்கக் கோரிக்கை

DIN

காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றி தூண்களில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து வருவதால் அந்த கம்பங்கள் விழுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத்தில் இருந்து ஒரகடம் செல்லும் சாலையில், சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை பிரியும் இடத்தில் மின்சார வாரியம் சார்பில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடப்பதால் வெயிலிலும், மழையிலும் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து வருகிறது. அதில் உள்ள இரும்புக் கம்பிகளும் துருப்பிடித்து வருகின்றன.
நெடுஞ்சாலையில் அந்த மின்மாற்றி விழுந்து விபத்துக்குள்ளானால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் உரிய நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT