தமிழ்நாடு

லட்சத்தீவு காவலர்களுக்கு பேரிடர் மீட்புப் பயிற்சி நிறைவு

DIN

அரக்கோணம் அருகே உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை தளத்தில் லட்சத்தீவு காவலர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் தெற்கு மண்டல பிரிவு அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ளது. இங்கு பல்வேறு மாநில காவலர்களுக்கு பேரிடர் மீட்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், லட்சத்தீவில் புதிய பேரிடர் மீட்புப் படை தொடங்கப்பட்டது.
இதையடுத்து லட்சத்தீவு யூனியன் பிரதேச காவலர்கள் 34 பேருக்கு கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல், கடந்த 25-ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா படை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், படையின் கமாண்டன்ட் கபில்வர்மன் பங்கேற்று, பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இவ்விழாவில், உதவி கமாண்டன்ட்கள் வினோத் பி.ஜோசப், ஜித்தேஸ் உள்பட படை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT