தமிழ்நாடு

மெரீனா கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டம்

DIN

சென்னை: மெரீனா கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கைது செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

தில்லி ஜந்தர்-மந்தரில் 16 நாள்களாகப் போராட்டம் நடத்தி வரும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் இன்று கொடூரம் பாம்புக் கறி தின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மெரீனாவில் போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலை அடுத்து மெரீனா கடற்கரையில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

இந்நிலையில், மெரீனா கடற்கரையில் கூடிய 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென்று கடலில் இறங்கி விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பியும் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் குரல் எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இளைஞர்களை கைது செய்து வருகின்றனர். போலீஸார் கடலில் இறங்கி வருவதைத் தொடர்ந்து இளைஞர்கள் கடலின் உள்பகுதியை நோக்கி செல்கின்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்களை மீட்கும் முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் மீனவர்கள் உதவியுடன் இளைஞர்களை மீட்கவும் போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.

கடலில் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள், தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்கம் வேண்டும். விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசினை பெரியளவில் போராட்டம் நடத்தப்படும். கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை என இளைஞர்கள் குற்றச்சாட்டினர்.

இச்சம்பவம் அனைவரும் மத்தியிலும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் இன்று காலை முதல் தொடங்கி உள்ளது.

தற்போது சென்னை, சேலம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT