தமிழ்நாடு

சேகர் ரெட்டி வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

தினமணி

சட்ட விரோதமாக புதிய ரூ.2,000 நோட்டுக்களை பதுக்கி வைத்ததாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி சேகர் ரெட்டி தொடர்ந்த வழக்கில் இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனைகளில் ரூ.147 கோடி மதிப்பிலான மதிப்பிழந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களும், ரூ.34 கோடி மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்களும்,178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சோதனையில் சிக்கிய புதிய ரூ.2,000 நோட்டுக்கள் தொடர்பாக சேகர்ரெட்டி உள்பட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சேகர் ரெட்டி, சீனவாசலு ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
 இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு அமலாக்கத் துறை இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT