தமிழ்நாடு

புதுச்சேரியில் இருந்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று சென்னை பயணம்

DIN

டிடிவி தினகரன் செவ்வாய்க்கிழமை (செப்.5) கூட்டியுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு செல்கின்றனர்.
புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் தனியார் சொகுசு விடுதியில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடந்த 13 நாள்களாக தங்கியுள்ளனர். இதற்கிடையே, கடந்த 2ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்த தினகரன் அவர்களைச் சந்தித்தார்.
விடுதியில் தங்கியிருந்த உறுப்பினர்கள் 19 பேரில் 15 எம்.எல்.ஏக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். தொகுதி பணிகளை மேற்கொள்வதற்காக சென்றதாகக் கூறப்பட்டது. ஜக்கையன், செந்தில் பாலாஜி, ஏழுமலை, மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட எம்எல்ஏக்களே விடுதியில் தங்கியிருந்தனர். வெளியூர் சென்ற எம்.எல்.ஏக்கள் இரவு திரும்பி விடுவர் என டிடிவி தினகரன் ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஏற்கெனவே பதிவு செய்த 20 அறைகளை சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்னும் காலி செய்யவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தங்க தமிழ்செல்வன், கதிர்காமு, பாலசுப்பிரமணியன், பார்த்திபன், கோதண்டபாணி ஆகியோர் திங்கள்கிழமை விடுதிக்கு வந்து சேர்ந்தனர். டிடிவி தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்.5) நடைபெற உள்ளது. தினகரன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் இபிஎஸ் தரப்பு கூட்டும் கூட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் கேட்ட போது கூறுகையில், "இபிஎஸ் தரப்பு அழைப்பு தொடர்பான தகவல் டிடிவி தினகரனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது முடிவுப்படி செயல்படுவோம்' எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT